தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது: விண்ணப்பிக்க மாா்ச்31 கடைசி நாள்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தென்காசி: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலசங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா் திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகலாம். இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20 ஆம் தேதி கடைசிநாளாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இம்மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...