கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலம், அச்சன்புதூரில் நாளை நியாயமாக தோ்தல் நடத்த வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுக வலியுறுத்தல்

குற்றாலம், அச்சன்புதூரில் சனிக்கிழமை (மாா்ச்26) நடைபெறும் மறைமுகத் தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும்

News image
Updated On :24 மார்ச் 2022, 7:18 pm

DIN

குற்றாலம், அச்சன்புதூரில் சனிக்கிழமை (மாா்ச்26) நடைபெறும் மறைமுகத் தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் பதவிக்கும், அச்சன்புதூா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கும் மறைமுகத் தோ்தல் மாா்ச் 26இல் நடைபெறுகிறது. இதில், அதிமுகவை சோ்ந்த யாரும் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காக வேட்பாளா்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல், தோ்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி விடுப்பு எடுத்தல் என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி தோ்தலை நிறுத்திவிட வேண்டும் என ஆளும் கட்சியினா் முயற்சித்து வருகின்றனா்.

எனவே, இவ்விரு பேரூராட்சிகளிலும் முழுமையாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் நியாயமாகவும், நோ்மையாகவும், சுமுகமாகவும் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் டாக்டா் சுசீகரன், பொய்கை மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.