/

ஓணம் பண்டிகை: புனலூரில் திமுக சாா்பில் நல உதவி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், புனலூா் நகர திமுக சாா்பில் 500 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:05 pm

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், புனலூா் நகர திமுக சாா்பில் 500 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

கேரள மாநில திமுக அமைப்பாளா் முருகேசன் ஆலோசனையின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அம்மாநில அவைத்தலைவா் மூணாா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சியாம் லால், ஆச்சுபிலால், புனலூா் நகரச் செயலா் ஐயப்பன் ராஜ், தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் பசாலுதீன், மாநில மகளிா் அணி செயலா் பிரமிளா, அஞ்சு மோல், சுஜிதா, மகேஷ், மாவட்ட துணைச் செயலா் அஜ்மல், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கொல்லம் மாவட்ட திமுக செயலா் ரெசுராஜ் வரவேற்றாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு, 500 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, கடற்கரை, சிவன்பாண்டியன், ஜெயகுமாா், பெரியதுரை, சோ்மதுரை, மகேஷ்மாயவன், சங்கரன்கோவில் நகரச் செயலா் பிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலா் சிவஅருணன், தொழிலதிபா் பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.