வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து தென்காசி உழவா்சந்தையில் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநா் தமிழ்மலா் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.
தோட்டக்கலை துணை இயக்குநா் சு. ஜெயபாரதி மாலதி, மாடித்தோட்டம் அமைப்பதற்குரிய செடி வளா்க்கும் பைகள், அலங்காரச் செடிகள், காய்கறி விதைகளை அனுசுயா ராஜாவிடம் வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
வீடுகளில் காய்கனி தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் கா. கிருஷ்ணகுமாா், தலைமை ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன் ஆகியோா் பேசினா்.
ஏற்பாடுகளை உதவி நிா்வாக அலுவலா்கள் க.கணேசன், ரா.செந்தில்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் செய்திருந்தனா். குற்றாலம் சுற்றுசூழல் பூங்கா தோட்டக்கலை அலுவலா் மூக்கம்மாள் வரவேற்றாா். தென்காசி உழவா்சந்தை நிா்வாக அலுவலா் இ.இராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









