தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா தொடக்கம்!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமை (பிப்.25) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Published On :

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமை (பிப்.25) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாவூர்சத்திரம் வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா சனிக்கிழமை  தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.15 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மற்றும் பாலாபிசேகமும், மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள், இரண்டாம் நாள் திருவிழா சைவ வேளாளர் சமுதாயம், மூன்றாம் நாள் திருவிழா தேவர் சமுதாயம், நான்காம் நாள் திருவிழா யாதவர் சமுதாயம், ஐந்தாம் நாள் திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம், ஆறாம் நாள் திருவிழா அரிசன சமுதாயம், ஏழாம் நாள் திருவிழா விஸ்வகர்மா சமுதாயம், எட்டாம் நாள் திருவிழா செங்குந்த முதலியார் சமுதாயம், ஒன்பதாம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம், பத்தாம் நாள் திருவிழா நாடார் சமுதாயம், பதினோராம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பில் நடைபெறுகிறது.

10ம் நாள் திருநாளான மார்ச் 6ஆம் தேதி காலை கீழப்பாவூர் சிவன்கோயில், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையடிப்பட்டி, திப்பணம்பட்டி, அரியப்பபுரம், வெய்க்காலிப்பட்டி, ஆரியங்காவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருவர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறும்.

நிறைவு நாளான மார்ச் 7ஆம் தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தெப்பக்குளம் அருகில் வைத்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பரகாட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறும்.

திருவிழாவிற்கான எற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.