தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பிரதமராக நீடிக்க மோடிக்கு உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்

நாட்டின் பிரதமராக நீடிக்க நரேந்திர மோடிக்கு தார்மீக உரிமை இல்லை என கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...

No moral right to continue as Prime Minister KC Venugopal targets PM Modi demands intervention in ECI dissent row

கே.சி. வேணுகோபால் - கோப்புப் படம்

Published On :

நாட்டின் பிரதமராக நீடிக்க நரேந்திர மோடிக்கு தார்மீக உரிமை இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (செப். 29) விமர்சித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

''இது அவரது மேலதிகாரிகளின் தெளிவான வழிகாட்டுதலின் பேரிலேயே செய்யப்படுகிறது. இந்த நாட்டில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். எனவே இது பிரதமருக்கும் தெரிந்திருக்கிறது.

இதில் தலையிடுவது பிரதமரின் தார்மீகப் பொறுப்பாகும். பிரதமர் மோடிக்கு பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என்பதே மத்திய செயற்குழுவின் கருத்தாக உள்ளது.

வாக்குத் திருட்டு பிரசாரத்தின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான பிரச்னையை கையில் எடுத்ததற்காக முழு செயற்குழுவும் ராகுல் காந்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது.

கடந்த 18-19 மாதங்களாக, தலைமைத் தேர்தல் ஆணையர் முற்றிலும் சமரசம் செய்துகொண்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி தொடர்ந்து முன்வைத்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது வாக்காளர் பட்டியல் என எதுவாக இருந்தாலும், நாட்டின் தேர்தல் முறை சிதைக்கப்பட்டுள்ளது என்றும், இவை இரண்டும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் நாடு முழுவதும் இதனைக் கொண்டுசெல்வோம்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

No moral right to continue as Prime Minister KC Venugopal targets PM Modi demands intervention in ECI dissent row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.