
முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில்
பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜய் நிற்பதாக எழுந்த கேள்விக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது குறித்து...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வழிநடத்துவார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.சி. வேணுகோபால் பேசியதாவது, "2029 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ராகுல் காந்திதான் வழிநடத்துவார்.
அதேநேரம், பிரதமர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவார் என்று வெளிவரும் செய்திகள் பொய்யானவை. அதுபோன்ற கோரிக்கைகளை தவெக தரப்பிலிருந்து கூறவில்லை. ஆகையால், யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக ராகுல் காந்தி போராட்டம் நடத்துவதுதான் இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மிக முக்கியமான தலைவர் ராகுல் காந்தி.
சில மாநிலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியா கூட்டணி வலுவாகவே உள்ளது. இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் கூடிய விரைவில் தீர்க்கப்படும். கூட்டணி தொடர்ந்து வலுவாகச் செயல்படும்.
பாஜக அரசு, நாட்டை இருளுக்கு கொண்டு செல்கிறது. தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலை மத்திய அரசு தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது. மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையைக்கூட அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார்.
Summary
Is CM Vijay a Prime Ministerial candidate? AICC general secretary K C Venugopal denies it.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





