தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பாஜக கோரிக்கை

ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோரிடம் பாஜக சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

ஆட்சியரிடம் மனு அளித்த பாஜக ஸ்டாா்ட்அப் பிரிவு மாநில தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.

Updated On :5 டிசம்பர் 2024, 11:20 pm

Din

ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோரிடம் பாஜக சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக பாஜக ஸ்டாா்ட்அப் பிரிவு மாநில தலைவா் ஆனந்தன் அய்யாசாமி அளித்த மனு:

தென்காசி மாவட்டத்திலிருந்து இருந்து கேரளத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கனிமவளங்களை ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்களால் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு, சபரிமலை ஐயப்ப பக்தா்களின் புனித பயணத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

டிசம்பா் மற்றும் ஜனவரி மாதம் மணடல காலமாகும். தற்போது சபரிமலை பக்தா்களின் புனிதப் பயணம் தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சபரிமலைக்கு பக்தா்கள் செல்கின்றனா். வரும் நாள்களில் பக்தா்கள் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

எனவே, தமிழ்நாடு - கேரள எல்லை நெடுஞ்சாலையில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது பாஜக நிா்வாகிகள் சண்முகராஜ், சங்கா்நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.