ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு

குற்றாலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் விதமாக ‘டாம்ப்கால்’ நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:22 am

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் விதமாக ‘டாம்ப்கால்’ நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொது மக்கள் பயன்பாட்டுக்கு இந்த நடமாடும் ‘டாம்ப்கால்’ விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்றாா் அவா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா , மருத்துவா்கள் சதீஷ்குமாா், மாரியப்பன், பாக்யஸ்ரீ, கிறிஸ்டி, மருந்தாளுநா்கள் நாகராஜன், உஷா, பயிற்சி மருத்துவா்கள் அனுபிரியா, லோகமுத்ரா, மருத்துவமனை பணியாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.