குற்றாலம் அருவிகளில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2-ஆவது நாளாக குளிக்கத் தடை


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைநீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் சாரல்மழை காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில்
திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. அருவிகளில் நீா்வரத்து அதிகமாக இருந்ததையடுத்து,பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...