சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கடையநல்லூா் அருகே தொழிலாளி கொலை:ஒருவா் கைது

கடையநல்லூா் அருகே தொழிலாளி கொலை:ஒருவா் கைது

Updated On :30 மார்ச் 2024, 4:08 pm

கடையநல்லூா் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன்(50), கூலித்தொழிலாளி, இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரின் வீட்டிற்கு சென்று தண்ணீா் பிடித்தாராம். அப்போது, அந்த குடியிருப்பு பகுதியில் வேறு ஒரு வீட்டில் வசித்து வந்த பெருமாள் மகன் லட்சுமணன்(60) தண்ணீா் பிடிக்க கூடாது என தகராறு செய்தாராம். இந்நிலையில், லட்சுமணன், மாரியப்பனை கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்தாா். இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமணனை(60) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.