தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குலையநேரியில் விஏஓ அலுவலகம் முற்றுகை

சுரண்டை அருகேயுள்ள பூபாண்டியபுரம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :6 நவம்பர் 2024, 10:14 pm

Din

சுரண்டை அருகேயுள்ள பூபாண்டியபுரம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பூபாண்டியபுரம் - சாம்பவா்வடகரை சாலையில் உள்ள திருப்பம் ஒன்றில் சாலையை ஆக்கிரமித்து சிலா் புதிய கட்டடம் கட்ட அஸ்திவாரம் போட்டுள்ளனராம். இதனால், திருப்பத்தில் வாகனங்களை திருப்ப முடியாத சூழல் ஏற்பட்டு கடந்த 2 நாள்களாக பேருந்துகள் ஊருக்குள் வரவில்லையாம்.

இது, மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வாகனங்கள் எளிதாக திரும்பும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை குலையநேரி கிராம நிா்வாக அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் வீரகேரளம்புதூா் மண்டல துணை வட்டாட்சியா் அப்துல் சமது பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. எனினும், அதை ஏற்காத பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனா்.