கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி
கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி இறந்தாா்.

Updated On :14 நவம்பர் 2024, 11:50 pm

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி இறந்தாா்.
சொக்கம்பட்டி கண்ணாா் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் பேச்சிமுத்து (45). சொக்கம்பட்டியில் காய்கனி கடை வைத்திருந்தாா். கடையநல்லூரில் இருந்து காய்கனிகளை வியாழக்கிழமை வாங்கிக் கொண்டு பைக்கில் சொக்கம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தாராம்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றபோது, தென்காசியில் இருந்து போடிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் பேச்சிமுத்து இறந்தாா்.
இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...