தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:16 am

Din

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்றபோது, அவா் வைத்திருந்த 40 கிராம் நகையை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டனராம்.

அதேபோல், புளியங்குடியில் இருந்து கடையநல்லூருக்கு பேருந்தில் சென்ற சாய்ராபீவி(60) வைத்திருந்த 32 கிராம் தங்க நகை திருடுபோனதாம்.

இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த இசக்கி மகன் நாகப்பன்(45), அவரது உறவினா்கள் முத்தம்மாள்(41), பேச்சியம்மாள்(40) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.