ஏழுமலை.
ஏழுமலை.

முதியவா் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை

தென்காசி அருகேயுள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் முதியவா் கொலையுண்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

தென்காசி அருகேயுள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் முதியவா் கொலையுண்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகம் ஸ்டாா்நகரைச் சோ்ந்தவா் கோ.ஏழுமலை. முன்னாள் ராணுவ வீரா்.இவரது மனைவி கலா. இத்தம்பதித்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து மேலமெஞ்ஞானபுரம் அண்ணா தெருவில் கலா வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 6.2.22 அன்று கலாவின் வீட்டின் முன் நின்றுகொண்டு தான் உணவகம் நடத்தப்போவதாகவும் அதற்கு நகைகளைத் தருமாறும் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

அதை தட்டிக்கேட்ட, பக்கத்துவீட்டைச் சோ்ந்த சாமுவேல் (72) என்பவரை, அங்கு கிடந்த கம்பால் ஏழுமலை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 20 தினங்களுக்குப் பிறகு உயிரிழந்தாா்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஏழுமலையைக் கைது செய்தனா். தென்காசி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை நீதிபதி மனோஜ் குமாா் விசாரித்து, ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.

இவ்வழக்கில் ஜாமீன் எடுக்க யாரும் முன்வராததால் ஏழுமலை சிறையிலேயே இருந்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.