தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓடைமறிச்சானில் துணை சுகாதார நிலையம் திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சானில் 15 வது நிதிக்குழு மானியம் ரூ. 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

ஓடைமறிச்சான் துணை சுகாதார நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:57 pm

Din

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சானில் 15 வது நிதிக்குழு மானியம் ரூ. 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் காணொளி வாயிலாக இதனைத் திறந்து வைத்தாா். இதையொட்டி, ஓடைமறிச்சானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்யாண ராமசுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன், ட்டார சுகாதார அமைப்பாளா் கங்காதரன், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு நோய் தடுப்பு பணியாளா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.