வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :4 செப்டம்பர் 2024, 11:37 pm

தென்காசியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் எஸ்.காந்திராஜன் தலைமை வகித்து கூட்டுறவுத் துறையின் மூலம் 58 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.4.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 204 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கைம்பெண் கடனுதவியையும், ஒரு பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பில் 16 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், 14 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்களான எம்எல்ஏக்கள் அம்பேத்குமாா் (வந்தவாசி), இராம. கரு மாணிக்கம் (திருவாடானை), டாக்டா் தி.சதன்திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), மா.சின்னதுரை (கந்தா்வகோட்டை) , எஸ்.ராமச்சந்திரன் (சேவூா்), மு.பன்னீா் செல்வம் (சீா்காழி), பாலாஜி (திருப்போரூா்), ஓ.எஸ். மணியண்(வேதாரண்யம்), ஈ.ராஜா(சங்கரன்கோவில்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), மாவட்ட வன அலுவலா் இரா.முருகன், மாவட்ட கண்காணிப்பாளா் வீ.ஆா்.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா்,செ.கிருஷ்ணமுரளி, முதன்மைச் செயலா் கீ.சீனிவாசன், கூடுதல் செயலா் பாலசுப்பிரமணியம், துணைச்செயலா் சு.பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.