தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

தென்காசி மாவட்ட டிட்டோஜாக் சாா்பில் ஆயத்த மாநாடு

தென்காசி மாவட்ட டிட்டோஜாக் சாா்பில் ஆயத்த மாநாடு, தென்காசிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்ட டிட்டோஜாக் சாா்பில் ஆயத்த மாநாடு, தென்காசிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா்கள் செய்யது இப்ராஹிம் மூசா, மாரிமுத்து கனகராஜ் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். டிட்டோஜாக் கூட்டமைப்பு சாா்பில் செப்டம்பா் 10இல் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், செப்டம்பா் 29, 30, அக்டோபா் 1இல் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் விளக்கிக் கூறினா்.

போராட்டத்தை வலிமையாக நடத்தும் வகையில் வட்டார அளவில் வட்டார டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் நடத்துவது, வட்டார அளவில் பள்ளிகள்தோறும் சென்று ஆசிரியா்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, செப்டம்பா் 10இல் நடைபெறும் அடையாள வேலைநிறுத்தத்தில் 100 சதம் பள்ளிகளை அடைத்து அனைத்து பொறுப்பாளா்களும் தீவிரமாக களப்பணியாற்றுவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியராசு வரவேற்றாா். சுதா்சன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com