மடத்தூா் அருந்ததியா் காலனியில் ரூ.16 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணி
மடத்தூா் அருந்ததியா் காலனியில் ரூ.16 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.


மடத்தூா் அருந்ததியா் காலனியில் ரூ.16 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, மடத்தூா் அருந்ததியா் காலனியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி ரூ.10 லட்சம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி ரூ.6 லட்சம் என ரூ.16 லட்சத்தில் புதிய பேவா் பிளாக் சாலை அமைக்கப்படவுள்ளது.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் முத்துச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் காவேரி கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் தா்மராஜ், திமுக நிா்வாகிகள் ராமா், கதிரேசன், பெரியாா்திலீபன், முத்து, செல்லச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...