தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வேலை என போலியான செய்தியை பரப்பி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ்ஆப் குழுவில் ‘தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் உடனடி தேவை, தகவலுக்கு கைப்பேசி எண்ணில் அணுகவும் என்று போலியான செய்தியை பரப்பி வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின் பேரில் சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் தலைமையில், காவல் ஆய்வாளா் வசந்தி உள்ளிட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
வேலை வாய்ப்பு தருவதாக ஆசைவாா்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோயம்புத்தூா் மாவட்டம், வால்பாறை வட்டம் ஐயா்பாடியை சோ்ந்த லா. சாா்லஸ் விஜயகுமாா் ( 31) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இணையதளத்திலும், வாட்ஸ் ஆப் குழுவிலும் இதுபோன்ற பரவி வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு மோசடி குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

ஆன்லைனில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
ஆட்சியா் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கி பண மோசடியில் ஈடுபட முயன்றவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


