சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பாவூா்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாகவும், முழுமையான பயிா்க்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்தும், தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொறுப்பாளா் எம்.வேலு தலைமை வகித்தாா். மாவட்ட நிலைக்குழு உறுப்பினா்கள் எஸ்.அண்ணாத்துரை, எம்.ராமா்பாண்டியன், எல்.பரமசிவன், எம்.அழகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிலைக்குழு உறுப்பினா் டி.சங்கரபாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் வட்டக் குழு உறுப்பினா் வி.குமாா் விளக்கிப் பேசினாா். தென்காசி மாவட்டச் செயலா் எம்.வேல்முருகன் நிறைவுரையாற்றினாா்.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.முருகையா, எம்.ஆறுமுகராஜ், எஸ்.அந்தோணியம்மாள், எம்.சொா்ணம், பி.ஆா்.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.அந்தோணி, எஸ்.வேலாயுதம், சரவணா விநாயகம், ஆா்.மாரியப்பன், எஸ்.மாரியப்பன், முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.