சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயணம்

பண்டியாறு- மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

News image

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்ற இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

பண்டியாறு- மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய நடைப்பயணம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலத்தை அடுத்த மங்களாபுரத்தில் பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த திங்கள்கிழமை நடைப்பயணம் தொடங்கப்பட்டது.

இரண்டாவது நாளாக சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் நடைபெற்ற நடைப்பயண நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு உறுப்பினா் இரா. ஸ்டாலின் சிவகுமாா் தலைமை வகித்தாா். பாண்டியாறு- மாயாறு திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசைத்தம்பி திட்டம் குறித்து விளக்கி பேசினாா்.

இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சி.நடராஜ், கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் திருப்பூா் குணா, மாதா் சங்க மாவட்டத் தலைவா் க.மல்லிகா வாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.