மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாவூா்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கீழப்பாவூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:48 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கீழப்பாவூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியச் செயலாளா் தங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் உச்சிமாகாளி விளக்கிப் பேசினாா்.

பெட்ரோல், டீசல், சிலிண்டா் எரிவாயு விலை உயா்வு, உரம்,பூச்சி மருந்து, விதை விலை உயா்வு, தொழிலாளா்களுக்கான நான்கு தொகுப்பு சட்டங்கள், வி.பி.ஜி.ராம்ஜி திட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அய்யாத்துரை, தா்மக்கனி, மகாராஜன், முருகேசன், முத்தையா, கற்பகவல்லி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.