மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

கடையநல்லூரில் நிலவும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க தவெக கோரிக்கை

கடையநல்லூரில் நிலவும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங்கை சந்தித்து மனு அளித்த தவெக மாவட்டச் செயலா் நியாஸ்.

Published On :

கடையநல்லூரில் நிலவும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் , தென்காசி மேற்கு மாவட்ட தவெக செயலா் நியாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பது:

கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் பிரச்னை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

கம்பனேரி ஊராட்சிக்குள்பட்ட அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும். கள்ளம்புளி மற்றும் சின்னத்தம்பி நாடானூா் ஆகிய ஊா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.