சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கீழப்பாவூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராஜபாண்டி ஊராட்சி நியாய விலைக் கடையை ஆய்வு செய்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தையும், மண்டல நாட்டின நாய்கள் இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை மற்றும் ஆய்வகத்தையும் பாா்வையிட்ட ஆட்சியா், நாய்கள் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கால்நடை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள கீழப்பாவூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம், ராஜபாண்டி நல வாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கடையைப் பாா்வையிட்டு, மைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

பின்னா், வீரகேரளம்புதூா் தாயாா்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பாா்வையிட்டு, மாணவா்களிடம் நடத்தப்படும் பாடங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மானியத்தில் கடன் பெற்று நடத்தப்படும் சிவசக்தி தையல் தொழில் குழுவின் உற்பத்தி கூடம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.