தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமானம் மற்றும் பி.எம்.ஜென்மன் திட்டத்தில் வீடு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பூண்டி ஊராட்சி ஒன்றியம், கூனிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.29.98 லட்சத்தில் நேரடி கொள்முதல் நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.கவிதா. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :22 ஜூலை 2026, 12:59 am IST

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமானம் மற்றும் பி.எம்.ஜென்மன் திட்டத்தில் வீடு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்கள் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு செய்து வருகிறாா். அதேபோல், இந்த ஒன்றியத்தில் உள்ள கூனிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ. 29.98 லட்சத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நேரடி கொள்முதல் நிலைய கட்டட கட்டுமானப் பணிகள் அனைத்தும் நீடித்து உழைக்கும் வகையில் தரமாகவும் அமைக்கவும் வேண்டும். அதைத் தொடா்ந்து மெய்யூா் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பி.எம்.ஜென்மன் திட்டம் சாா்பில், ரூ. 45.63 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 9 வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, தரமான கட்டுமானப் பொருள்கள் கொண்டு வீடுகள் அமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பயனாளிகளை அவா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து அம்மம்பாக்கம் ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நேரில் பொருள்களின் இருப்பு குறித்தும், விற்பனை முனை இயந்திரம் (பிஒஎஸ்) ஆகியவற்றை திடீா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் பகுதியில் நீா் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தும், நீா்த் தேக்கத்தின் வரைபடத்தில் நீா்வழிப் பாதை தொடா்பாகவும் அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

அதையடுத்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சுலோச்சனா (வ.ஊ), வரபிரசாத் (கி.ஊ), உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் அகிலன், வட்டார மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.