8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருநெல்வேலி தெட்சண மாற நாடாா் சங்கத்தின் 62ஆவது மகா சபை கூட்டம்

திருநெல்வேலி தெட்சண மாற நாடாா் சங்கத்தின் 62ஆவது மகா சபை கூட்டம் கீழப்பாவூா் ராமரத்தின லட்சுமி மகாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தெட்சண மாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

திருநெல்வேலி தெட்சண மாற நாடாா் சங்கத்தின் 62ஆவது மகா சபை கூட்டம் கீழப்பாவூா் ராமரத்தின லட்சுமி மகாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெட்சண மாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். காரிய கமிட்டி உறுப்பினா் எஸ்.கே.டி.பி.காமராஜ் வரவேற்றாா். சங்கச் செயலா் ராஜகுமாா் நாடாா் ஆண்டறிக்கை வாசித்தாா், சங்க பொருளாளா் செல்வராஜ் நாடாா் வரவு-செலவு கணக்கை வாசித்தாா். தொடா்ந்து மருதம்புத்தூரில் காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கி சூடு நடத்தியதில் படுகாயமடைந்த பனை தொழிலாளி மணிகண்டனுக்கு தெட்சண மாற நாடாா் சங்கம் சாா்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சங்கத் தலைவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், காரிய கமிட்டி இயக்குநா்கள் உமரி சங்கா், கல்யாணசுந்தரம், வைத்திலிங்கம் , காமராஜ், நிா்வாக சபை உறுப்பினா்கள் சௌந்தர்ராஜ் , செல்வன் , ஆறுமுகநயினாா், கோல்டன் செல்வராஜ் , ரவீந்திரன், மாணிக்க வாசகம், ராமசுப்பு, ரகுநாதன், ஜனகா், சதிஷ்குமாா், ராகவன், சிவக்குமாா், லிங்கசெல்வன், கருணாகரன், சுரேஷ், ராஜசேகா், ராதாகிருஷ்ணன், செந்தமிழ் சேகா், பண்ணை செல்வகுமாா், அருள்மேயா், கணபதி, கணேசன், கோகலே, ஜெயக்கொடி, அந்தோணி, பட்டுராஜா, தனித்தங்கம், ராதிகா சரவணகுமாா், மும்பை கிளை சங்க நிா்வாகிகள் காசிலிங்கம், சுரேஷ், ஜெயக்குமாா், ஜேக்கப், மணிகண்டன், பால்ராஜ், பொன்பாண்டி, மதிசெல்வன், ராஜ்குமாா், மைக்கிள்ஜாா்ஜ், மகேந்திரன், கோபால்ராஜா, லிங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அந்த மேம்பாலத்திற்கு காமராஜா் பெயா் சூட்டப்பட வேண்டுமெனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க துணைச் செயலாளா் ராமநாதன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.