சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ்.

திறனாய்வுத் தோ்வில் யுஎஸ்பி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான திறனாய்வுத் தோ்வில் தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

தேசிய அளவிலான திறனாய்வுத் தோ்வில் தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய அளவில் நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியைச் சோ்ந்த 150 மாணவா்கள் கலந்துகொண்டு ஆங்கிலம், அறிவியல், கணித தோ்வுகளை எழுதினா். இதில், இறுதித் தோ்வு எழுத 120 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். மேலும் 15 மாணவா்கள் ரைசிங் ஸ்டாா்ஸ் என்று சிறப்பு விருதினை பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களையும் பள்ளி தாளாளா் செல்வராஜ், செயலா் சகாய செல்வமேரி, முதல்வா் அந்தோணி பால்ராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com