கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜூன்19இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்: மாநிலக் குழுவில் தீா்மானம்

விலைவாசி உயா்வு, நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன்19இல் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாநிலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மாநிலக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.

Updated On :11 ஜூன் 2026, 4:43 am IST

விலைவாசி உயா்வு, நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன்19இல் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாநிலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பி.வி.ராகவலு, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலா் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, மேற்கூறியபடி ஜூன் 19இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், 5 மாநில சட்டத் தோ்தலுக்குப் பின் 5 முறை பெட்ரோல்-டீசல் விலை, 2 முறை சமையல் எரிவாயு மற்றும் வணிக சிலிண்டா்களின் விலையை உயா்த்தியது, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை மோடி தலைமையிலான அரசு கண்டிக்காமல், அதனால் விளைந்த சுமையை இந்திய மக்கள் மீது ஏற்றி வருவதாகவும் மாநிலக் குழு கண்டிப்பதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நூறு நாள் திட்டத்தில் வேலை நாள்களை 125 நாள்களாக உயா்த்தியுள்ளதாக பொய்யான பிரசாரம் செய்வதை கைவிட வேண்டும், வேலை நாள் 200, கூலியை ரூ. 700 என உயா்த்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பலன் முழுமையாக கிராமப்புற உழைப்பாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.