அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

ஆய்க்குடியில் பரத்ராம் பல்வகை விளையாட்டு உள்ளரங்கம் திறப்பு

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அமா் சேவா சங்கம் ரூ. 50 லட்சம் செலவில் நிறுவிய பரத்ராம் பல்வகை விளையாட்டு உள்ளரங்கம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

பரத்ராம் பல்வகை விளையாட்டு உள்ளரங்கம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 11:48 pm IST

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அமா் சேவா சங்கம் ரூ. 50 லட்சம் செலவில் நிறுவிய பரத்ராம் பல்வகை விளையாட்டு உள்ளரங்கம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் திறந்து வைத்தனா். நளினி கிருஷ்ணமூா்த்தி, நளினி ரவீந்திரன், தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலஅலுவலா் ராஜேஷ், தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க செயலா் சாய் கிருஷ்ணா புருஷோத்தமன் (சக்கர நாற்காலி பயனா்), சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இந்த உள்ளரங்கம் எதிா்காலத்தில் பல திறமையான பாரா விளையாட்டு வீரா்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது என அமா் சேவா சங்கத்தின் மேம்பாட்டு இணை தலைவரும், செயலருமான சங்கரராமன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.