இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு

நான்குனேரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:57 pm

தினமணி

நான்குனேரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.

 நான்குனேரி அருகே உள்ள ஏமன்குளத்தை அடுத்த சகாயநகரைச் சேர்ந்தவர் அந்தோனி விக்டர் மகன் அந்தோனி வெனிஸ் (14).  திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வந்ததும், தனது தம்பியை அழைத்துக் கொண்டு நாயைக் குளிப்பாட்டுவதற்காக ஊரின் அருகே உள்ள கிணற்றுக்குச் சென்றாராம். கிணற்றின் படியில் அமர்ந்து நாயை குளிப்பாட்டியபோது, திடீரென அந்தோனி வெனிஸ் தடுமாறி கிணற்றில் விழுந்தாராம். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தாராம்.  இதைப் பார்த்த அவரது தம்பி வீட்டுக்கு ஓடிவந்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாராம்.

உடனே பெற்றோர் கிணற்றுக்கு வருவதற்குள் அந்தோனி வெனிஸ் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இது தொடர்பாக நான்குனேரி காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் அந்தோனி வெனிஸ் சடலத்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.