ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை சார்பில்,  பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஆதித்தமிழர் பேரவை சார்பில்,  பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்துவட்டி தடைச்சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம் ஆகியவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும்.  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அலட்சியம் காட்டாமல் சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சட்டங்கள் வலியோரைக் கண்டால் வளைந்து கொடுக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றியச் செயலர் ந.தமிழ்குட்டி தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் செல்வம், மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  ஆதித்தமிழர் பேரவை கிழக்கு மாவட்டச் செயலர் கு.கி.கலைகண்ணன், மாநில அமைப்புச் செயலர் சோ.அருந்ததி அரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  ஒன்றிய, மாநகர பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com