நாளை ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக 76ஆவது ஆண்டு விழா
ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக 76ஆவது ஆண்டுவிழா மற்றும் அனந்தராமகிருஷ்ணன் 112ஆவது பிறந்தநாள் விழா நவ. 10, 11 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.


ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக 76ஆவது ஆண்டுவிழா மற்றும் அனந்தராமகிருஷ்ணன் 112ஆவது பிறந்தநாள் விழா நவ. 10, 11 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.
முதல்நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவள்ளுவர் கழக 76ஆவது ஆண்டு விழாவிற்கு துணி வணிகர் இலக்கிய வட்டச் செயலர் சோனா. வெங்கடாச்சலம் தலைமை வகிக்கிறார். பொருநை இலக்கிய வட்டத் தலைவர் ஆர். நாதன் முன்னிலை வகிக்கிறார்.
இந் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ச. கணபதி ராமன், வேலம்மாள் முத்தையா, ஆசிரியர்கள் இ.மா. ராமச்சந்திரன், சி. ஜோஸ்லின் பிரான்ஸிஸ் இமாகுலேட் ஆகியோருக்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் அ.சி. சைலப்பன் விருது வழங்குகிறார். ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வர் ஆர். வெங்கட்ராமன் ஆண்டுவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். தொடர்ந்து ராம பூதத்தான், பி. இளங்கோ, கே. கார்த்திகா, பாரதிகண்ணன், ராஜேஸ்வரி ஆகியோர் பங்குபெறும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
நவ. 11 சனிக்கிழமை அனந்தராமகிருஷ்ணன் 112ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் 112 மாணவர், மாணவிகளுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அ. ஜான்பிரிட்டோ, அவ்வை ஆசிரமம் உதவி தாளாளர் பாலமுருகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சை. இசக்கி முத்து ஆகியோர் பரிசுகள் வழங்குகின்றனர். தொடர்ந்து அ. பாலசரஸ்வதி சிறப்புச் சொற்பொழிவும், கல்யாணி சிவகாமிநாதன், ஏ. முத்துசாமி, என். கனகசபாபதி ஆகியோர் கலந்து கொள்ளும் மூவர் அரங்கமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...