எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நெல்லையில் திமுக, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து(நவ.8) திருநெல்வேலி கிழக்கு, மத்திய மாவட்ட திமுக, தோழமைக் கட்சிகள் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:40 am

DIN

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து(நவ.8) திருநெல்வேலி கிழக்கு, மத்திய மாவட்ட திமுக, தோழமைக் கட்சிகள் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்டச் செயலர் ரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.  மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வகாப், பேரவை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன் (திருநெல்வேலி), டி.பி.எம்.மைதீன்கான் (பாளையங்கோட்டை),  பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்),  முன்னாள் பேரவை உறுப்பினர் அப்பாவு  மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில்  மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உஸ்மான்கான், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் கரிசல் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கலைக் கண்ணன்உள்ளிட்டோர்  மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்துப் பேசினர்.
காங்கிரஸ் சார்பில்...
பாளையங்கோட்டையில், காங்கிரஸ்  கட்சியினர் புதன்கிழமை மொட்டை அடித்து, சங்கு ஊதி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன் தொடங்கிவைத்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு,  மாநில பொதுச்செயலர் எஸ். வானமாமலை, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ்முருகன், உதயகுமார், முன்னாள் தலைவர் டி.என். உமாபதி சிவன், முன்னாள் துணைத் தலைவர் வாகை கணேசன், சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் அப்துல்காதர், அந்தோணிசெல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் டி. காமராஜ், மண்டலத் தலைவர் சுல்தான் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்...
சிந்துபூந்துறையில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மார்க்சிஸ்ட்  மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் ஏ.எம்.சத்யன் தொடக்கவுரையாற்றினார். மார்க்சிஸ்ட்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பழனி, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஆர்.ரெங்கன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நிர்வாகி கே.கணேசன், டி.சங்கரபாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் பி.பெரும்படையார், ஆர்.கசமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.