திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு முதல் பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவரும் சென்னை தனியார் நிறுவன திட்ட மேலாளருமான குமாரசாமி தலைமை வகித்தார்.
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ்பாபு முன்னிலை வகித்தார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் இக்னேஷியஸ் சேவியர், க. ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் வி. இளங்கோவன், நிர்வாக அலுவலர் எஸ். கிருஷ்ணகுமார், அமைப்பின் செயலரும் தனியார் நிறுவன மூத்த மேலாளருமான சங்கரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 350 முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதையொட்டி, கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தனியார் நிறுவன துணை மேலாளர் அருண் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஞா. அரவிந்த் சாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.