பேண்டு வாத்தியப் போட்டி: 200 மாணவர்கள் பங்கேற்பு
தென்மாவட்ட அளவிலான பேண்டு வாத்திய இசை கலைஞர்களுக்கான போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தென்மாவட்ட அளவிலான பேண்டு வாத்திய இசை கலைஞர்களுக்கான போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட பேண்டு இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 10 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.வி. வீரபத்திரன் தொடங்கிவைத்தார். அமைப்பின் தலைவர் பி. செல்வகுமார் தலைமை வகித்தார். செயலர் சாம்டன்ஸ்டீபன், துணைத் தலைவர் கே. முருகானந்தம், பொருளாளர் கே. முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி நடுவர்களாக நெல்லை சுந்தரராஜன், நெல்லை ராகவன், ஆர். சாமுவேல்ரிச்சர்ட் ஆகியோர் இருந்தனர்.
போட்டியில், மூத்தோர் பிரிவில் பாளையங்கோட்டை ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி முதலிடமும், புனிய அந்தோணியார் மெட்ரிக் பள்ளி 2 ஆவது இடமும், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி 3 ஆவது இடமும், மிக இளையோர் பிரிவில் தச்சநல்லூர் பாலர்வாடி மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றன. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு சின்சியர் சமூக சேவை மையத் தலைவர் ஜமால்முஹம்மது கேடயம், சான்றுகள் வழங்கிப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...