அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:54 am

DIN

திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு முதல் பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவரும் சென்னை தனியார் நிறுவன திட்ட மேலாளருமான குமாரசாமி தலைமை வகித்தார்.
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ்பாபு முன்னிலை வகித்தார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் இக்னேஷியஸ் சேவியர், க. ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் வி. இளங்கோவன், நிர்வாக அலுவலர் எஸ். கிருஷ்ணகுமார், அமைப்பின் செயலரும் தனியார் நிறுவன மூத்த மேலாளருமான சங்கரமணி  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 350 முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதையொட்டி, கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தனியார் நிறுவன துணை மேலாளர் அருண் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஞா. அரவிந்த் சாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.