திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் 41 அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 19 ஆயிரத்து 548 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ அறுவடை முடிவடையும் நிலையில் உள்ளது. தாமதமாக நடவு செய்த ஒரு சில இடங்களைத் தவிர பிற இடங்களில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. இப்பாசனத்தில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. ஒன்றரை மேனி வரை சாகுபடி கிடைத்தபோதிலும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பெருமளவில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிகழாண்டு முன்னீர்பள்ளம், மூளிக்குளம், வடக்கு அரியநாயகிபுரம், ரவணசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, வீரவநல்லூர், கோவில்குளம், புளியரை, சிவகிரி, சுத்தமல்லி, திருக்குறுங்குடி, மேலச்செவல், சிவசைலம், நடுவக்குறிச்சி உள்பட 41 இடங்களில் அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு நிலையங்களில் சன்ன ரகம் நெல் குவிண்டால் (அதாவது 100 கிலோ) ரூ. 1660-க்கும், மோட்டா ரக நெல் குவிண்டால் (100 கிலோ) ரூ. 1600-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை (ஏப்.7) 41 நிலையங்களில் மோட்டா ரக நெல் 300 மெட்ரிக் டன், சன்ன ரக நெல் 19 ஆயிரத்து 148 மெட்ரிக் டன் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 548 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாள்களில் வரவு வைக்கப்பட்டு வருவதாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

