4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பழையபேட்டையில் நகை மோசடி: பெண் கைது

பழையபேட்டையில் நகையை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:44 am

பழையபேட்டையில் நகையை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பழையபேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (44). அதே பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (45). உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தேவை எனக் கூறி,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமியின் நகையை பெற்ற பேச்சியம்மாள் அதன்பின்பு திருப்பி கொடுக்கவில்லையாம். 
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தபோது நகையை அடகுவைத்திருப்பது தெரியவந்ததாம். காவலர்களிடம் அறித்த வாக்குறுதிபடி நகையை திருப்பிக் கொடுக்காததால் பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி மீண்டும் புகார் அளித்தாராம். அதன்பேரில் போலீஸார் பேச்சியம்மாளை கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய ஆட்சேபம் தெரிவித்து போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.