பாரதிதாசன் படத்துக்கு மரியாதை

பாளையங்கோட்டை மகாராஜநகரில் பாவேந்தர் பாரதிதாசனின் 127ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

பாளையங்கோட்டை மகாராஜநகரில் பாவேந்தர் பாரதிதாசனின் 127ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் எஸ்.கே.டி. கண்மணி மாவீரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சியின் மாநகர பொறுப்பாளர் முருகன், மாணவரணி நிர்வாகி அ. முத்துபாண்டி, தென்மண்டலச் செயலர் அழகர்சாமி, தொழிற்சங்க மண்டலச் செயலர் மகேந்திரன், மாணவரணி தலைவர் விஜி தேவேந்திரன், இளைஞரணி நிர்வாகி சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com