தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேரவையில் ஜெயலலிதாவுக்கு சிலை: அதிமுக வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என அதிமுகவின் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:35 am

DIN

தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என அதிமுகவின் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  செயலர் கே.ஜெ.சி. ஜெரால்டு தலைமை வகித்தார்.  பகுதிச் செயலர்கள் எஸ்.எஸ். ஹயாத் (மேலப்பாளையம்), கி. மாதவன் (தச்சநல்லூர்), எஸ். கிருஷ்ணமூர்த்தி (பாளையங்கோட்டை), ந. மோகன் (திருநெல்வேலி), பேரவை நிர்வாகிகள் கே. முத்துசரவணன், ஜி. காந்திமதிநாதன், எஸ். சண்முகையா, டி. சௌந்தர்,  எஸ். பரமகுருநாதன், ஏ. ரவிச்சந்திரன், ஏ. அந்தோணி, ஒன்றியச் செயலர்கள் கங்கை முருகன், பழவூர் வேலாயுதம், மாணவரணி பொதுச்செயலர் ஜான்சன், நகரச் செயலர்கள் ஆறுமுகம், ஹரிஹரசுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது; குழந்தைகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு நல உதவிகள் வழங்குவது;
சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைத்ததற்கும், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கவும், கடற்கரையில் நினைவு மண்டபம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது; தமிழக பேரவை, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை வைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை நிர்வாகி எம். ஜெயந்திகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.