சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

நெல்லையில் விவேகானந்தர் மன்ற கூட்டம்

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 193 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:04 am IST

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 193 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு,  மன்றத் தலைவர் பா. வளன் அரசு தலைமை வகித்தார்.  விவேகானந்தரின் ரயில் பயணம் எனும் தலைப்பில் சிவ. கிருபாகரன் சொற்பொழிவு ஆற்றினார்.  இதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் செ. திவான் ஆகியோர் பேசினர்.  வெள்ளத்துரை,  ராஜகோபால்,  சு. முத்துசாமி,  முத்துக்குமார்,  திருக்குறள் முருகன்,  கோதை மாறன்,  குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஓய்வுபெற்ற ஆசிரியர் வை. ராமசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.