
நெல்லை அருகே விபத்து: பெண் குழந்தை உள்பட இருவர் சாவு
திருநெல்வேலி அருகே பிராஞ்சேரி பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி அருகே பிராஞ்சேரி பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம் நகர், ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர். டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இவரது சிவரஞ்சனி (21). இத் தம்பதிக்கு பாலமுகில் (இரண்டரை) என்ற மகனும், புகழ்யா (ஒன்றரை) என்ற மகளும் பிறந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை உத்திரபசுபதி நாயனார் தெருவில் வசித்து வரும் சிவரஞ்சனியின் தந்தையான ஆட்டோஓட்டுநர் வனராஜாவும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் ஆட்டோவில் கீழ முன்னீர்பள்ளம் சென்றனர். மகள் மற்றும் பேரன், பேத்தியை அழைத்துக் கொண்டு சிங்கிகுளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
பின்னர் மாலையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பிராஞ்சேரி பகுதியில் வந்தபோது ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்ததில் வனராஜா, புகழ்யா, சிவரஞ்சனி, சுப்புலட்சுமி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கிகுளத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி முருகன் (53), அவரது மனைவி வள்ளி (45) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே புகழ்யா, முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனின் பேத்தி கார்த்திகா(10), ஆட்டோவில் சென்ற பாலமுகில் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





