டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் துத்திகுளம்-வீ.கே.புதூர் சாலை

துத்திகுளம் - வீ.கே. புதூர் இடையே மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:56 am IST

துத்திகுளம் - வீ.கே. புதூர் இடையே மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள  துத்திகுளம் மற்றும் சிவலிங்க புரம் கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து 2.5 கி.மீ. தொலைவுள்ள வீ.கே. புதூருக்கு  சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சாலையின் இரு புறமும் வயல் வெளிகள் உள்ளதால் அதிக அளவில் விவசாயிகளும், வீ.கே. புதூர் ஐ.டி மற்றும் சுரண்டை அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். 
இச்சாலை இதுவரை சீரமைக்கப்படாத நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளதுடன்,  சுமார் 7 கி.மீ. கூடுதலாக சுற்றி கல்லூத்து சாலையை  பயன்படுத்தும் நிலை உள்ளது.  வெளியூர் செல்ல கூடுதல் நேரம் ஆவதுடன் செலவும் அதிகமாகிறது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே, மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் நலன்கருதி இந்தச் சாலையை மாணவர்கள் உடனடியாகச் சீரைமக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.