தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா பாளையங்கோட்டையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் நேதாஜியின் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தென்னங்கன்று ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அரசு சார்பில் நேதாஜி சிலை அமைக்க வேண்டும்; நேதாஜியின் பிறந்த தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலர் முத்துப்பாண்டியன், தொண்டரணிச் செயலர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் யாபேஸ் பாண்டியன், பகுதிச் செயலர் குமார் பாண்டியன், பகுதி இளைஞரணித் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நேதாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காக்கும் உறுதிமொழியேற்கப்பட்டது.
நிகச்சிக்கு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு நிர்வாகி அ.பீட்டர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொது நலசங்கத்தை சேர்ந்த பால் அண்ணாத்துரை, டேனியல், சீனிவாசன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!

பணவரவு யாருக்கு? இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
