பணகுடி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த நிலத்தரகர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
வள்ளியூரைச் சேர்ந்த பொன்னம்பலம் மகன் ஞான நிக்கேஷ் ஜட்சன்(42). இவர், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவரும், ஆவரைகுளம் அருகே உள்ள பிள்ளையார்குடியிருப்பைச் சேர்ந்த நிலத்தரகர் தர்மராஜ் மகன் மதன்(39) என்பவரும் காவல்கிணறில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே நிலம் வாங்குவது தொடர்பாக காரில் சென்றனர். அங்கு, சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அதன் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் மருத்துவர் அதே இடத்தில் இறந்தார். பலத்த காயங்களுடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலத்தரகர் செவ்வாய்க்கிழமைஇறந்தார். இது தொடர்பாக பணகுடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமர் என்பவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!
அகம் மகிழும் என் அல்லிக்குளம்... கவனம் பெறும் தீ பாடல்!

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம்! காரணம் அறிய...

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம்: அதிமுக இன்பதுரை எம்.பி
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
