நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புளியங்குடி முப்பெருந்தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி

Updated On :23 ஜனவரி 2019, 6:06 am IST

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பால நாகம்மன் கோயிலில்  பௌர்ணமி திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மாலை 6 மணிக்கு முப்பெருந்தேவி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகமும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டரில் சிறப்பு பாலபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து முப்பெருந்தேவியருக்கு சிறப்பு அலங்காரமும்,பெரிய தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, பாடல்கள் பாடி வழிபட்டனர்.  பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.