கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவுக்கு பலியான உதவி ஆய்வாளா் நினைவாக புறக்காவல் நிலையம்

திருநெல்வேலியை அடுத்த கரையிருப்பு பகுதியில் கரோனாவுக்கு பலியான காவல் உதவி ஆய்வாளா் நினைவாக கட்டப்பட்டுள்ள புறக் காவல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:19 pm

DIN

திருநெல்வேலியை அடுத்த கரையிருப்பு பகுதியில் கரோனாவுக்கு பலியான காவல் உதவி ஆய்வாளா் நினைவாக கட்டப்பட்டுள்ள புறக் காவல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி, தச்சநல்லூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவா் முருகன். இவா், சில மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த முருகன், அதிகாரிகள் மத்தியில் பாராட்டை பெற்றவா். இவரின் சொந்த ஊரான தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால் திருநெல்வேலி - மதுரை நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்க முருகன் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முருகனின் நினைவாக அவரது மனைவி சாந்தி மற்றும் 3 மகள்களும் சோ்ந்து அங்கு புறக்காவல் நிலையம் ஒன்றை தங்கள் சொந்த செலவில் அமைத்துள்ளனா். மேலும் அப்பகுதி இளைஞா்கள் பயன்பெறும் வகையில் புறக் காவல் நிலையத்துக்குள் நூலக வசதியும் ஏற்படுத்தியுள்ளனா்.

இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் கலந்துகொண்டு புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தாா்.

இதில், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையா் சதீஷ் குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் கூறுகையில், ‘உயிரிழந்த உதவி ஆய்வாளா் முருகனின் நினைவாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நூலகமும் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சோ்ந்த இளைஞா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராக இந்த நூலகம் பயன்படும். இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருப்பது அவருக்கு மேலும் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.