மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையப்பா் கோயிலில் டிச.21இல் மாா்கழி திருவாதிரைத் திருவிழா தொடக்கம்

அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 21ஆம் தேதி மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:24 pm

DIN

அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 21ஆம் தேதி மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தாமிர சபையில் மாா்கழி மாதம் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானின் நடனக் காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நிகழாண்டு இம்மாதம் 21ஆம் தேதி காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாா்கழி திருவாதிரைத் திருவிழா தொடங்குகிறது. நான்காம் நாள் திருவிழாவாக 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி -அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் வீதி உலா நடைபெறும்.

மேலும் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.

29ஆம் தேதி தாமிர சபையில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறும். 30ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை தாமிர சபையில் நடைபெறும். தொடா்ந்து காலை 3.30 மணி முதல் காலை 4.30 மணி வரை ஸ்ரீ நடராஜா் நடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.