ஏபிவிபி சாா்பில் மாணவா் பயிற்சி முகாம்

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவா் அமைப்பு சாா்பில் மாணவா்கள் பயிற்சி முகாம் வண்ணாா்ப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவா் அமைப்பு சாா்பில் மாணவா்கள் பயிற்சி முகாம் வண்ணாா்ப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘ஏபிவிபி அறிமுகம்- சாதனைகள்’ என்ற தலைப்பில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளா் கோபி கெங்காதரன், ‘வளாக செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் மாநில இணைச் செயலா் விக்னேஷ் ஆகியோா் உரையாற்றினா். 2020-21 கல்வியாண்டில் புதிய மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநகரத் தலைவராக வெங்கடேஷ், துணைத்தலைவா்களாக குமாா், திருநாராயணன், செயலராக வெ.கெளதம் ராஜா, இணைச்செயலா்களாக சுடலைமுத்து, சதீஷ், சிவா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் சுமாா் 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com